சில தீய நோக்கம் கொண்ட மனிதர்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், சிலர் ஆர்.எஸ்.எஸ் மக்களுக்கு செய்யும் சேவைகளை மறைத்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்பு என்று தவறான கருத்துக்களை இன்று வரை பரப்பி வருவதையே தங்கள் கடமையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்ச்சிடு அறக்கட்டளையின் தலைவர் சோஹெல் ராணா ஆலம் என்னும் பெங்கால் இஸ்லாமியர் தனது அனுபவத்தை இவ்வாறு கூறியுள்ளார்.
‘நான் ஒரு பாஜக ஆதரவாளர் அல்ல, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு எதிரானவன் நான். ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால், முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த 5-6 பெங்காலி முஸ்லிம் தொழிலாளர்கள் தாராவியில் சிக்கித் தவித்தனர். மற்றும் மும்பையின் கட்கோபர் பகுதியில் பாங்குரா மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 7-8 தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர்.
அவர்களுக்கு உதவும் பொருட்டு முதலில் நான் காட்கோபரின் ஏ.சி.பியை அழைத்தேன், அவர் கட்டுப்பாட்டு அறையின் எண்ணைக் கொடுத்தார். அதன் பின்னர் எனது நிலைமையை கட்டுப்பாட்டு அறைக்கு விளக்கி கூறினேன். அவர்கள் எனக்கு அப்பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஒருவரின் நம்பரை கடுட்டுப்பாட்டு அறை எனக்கு வழங்கியது.
அப்பகுதியில் நிவாரண பணி மேற்கொள்ளும் தலைவர் மகேஷ் குல்கர்னியை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பது.. என் மனதில் சில சந்தேகங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியது. நான் அவரிடம் கேட்டேன். ‘நான் ஒரு முஸ்லீம் மற்றும் ஏழை முஸ்லிம்களுக்கு கூட, ஆர்.எஸ்.எஸை பற்றி அச்சம் உள்ளது.
அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் என்று நாங்கள் கேள்விபட்டுள்ளோம். நான் உங்களிடம் உதவி கேட்கலாமா அல்லது வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு மகேஷ் ‘நாங்கள் முதலில் மனிதர்கள், ஆர்.எஸ்.எஸ் எந்த பாகுபாடும் இன்றி மனிதகுலத்திற்கு சேவை செய்ய கற்றுக்கொடுக்கிறது என்று கூறினார்.
உடனே நான் அதிர்ச்சி அடைந்தேன், அதன்பின் அவரிடம் நிலைமையை கூறினேன். தாராவியில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் தொழிலாளர்கள் மகேஷ் குல்கர்னியின் முயற்சியால் உதவி பெற்றனர். அவரின் விரைவான உதவியால் நான் ஆச்சரியப்படவில்லை, ஆனால் சுயம்சேவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தாராவிக்குச் சென்று தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கியது என்னை ஆச்சர்யப்படுத்தியது.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக முஸ்லிம்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியவர்கள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்”, மும்பையில் உள்ள பெங்காலி முஸ்லிம்களுக்கு உதவி செய்தது ஆர்.எஸ்.எஸ். சில குறுகிய எண்ணம் கொண்ட மனிதர்கள் எவ்வளவு வெறுப்பு பரப்பினாலும்., சமூகம், மதம், அல்லது அரசியல் தொடர்புகள் எதுவாக இருந்தாலும், உள்ளார்ந்த நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
ஊரடங்கு உத்தரவு கடினமாக இருந்த சூழ்நிலையில் மும்பை ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜன்கல்யாண் சமிதியின் சேவை வயது, மொழி, சாதிகள், மற்றும் மதம் ஆகியவற்றின் எல்லைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஸ்வயம்சேவர்களின் தன்னலமற்ற செயல்கள் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸை அனுபவத்தால் புரிந்து கொள்ளுங்கள், மீடியா அறிக்கைகளால் அல்ல!’ மனிதகுலத்திற்கான சேவை மிகப் பெரிய தர்மம் மற்றும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதை விட சிறந்தது எதுவுமில்லை என்று சோஹெல் ராணா ஆலம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.