ஆர்.எஸ்.எஸ் தலைவரின் யுகாதி சிறப்புரை !

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் யுகாதி சிறப்புரை !

Share it if you like it

  • இன்று யுகாதி பண்டிகை மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவிய ஸ்தாபகர் டாக்டர்.ஹெட்கேவாரின் பிறந்தநாள் என்பதால் தற்போதைய அகில பாரத தலைவராக உள்ள மோகன் ஜி பகவத் அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில், அன்பார்ந்த ஸ்வயம்ஸேவக ஸகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் 5122ம் வருடத்திய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டின் துவக்கத்திலேயே உலகம் முழுவதும் ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளது. உலகத்தோடு பாரதமும் இப்போரில் பங்கேற்றுள்ளது. அதனால் இதில் ஸ்வயம்ஸேவகர்களின் பொறுப்பும் உள்ளது.
  • இவ்விழா நமது உறுதியேற்பு நாளாக கொண்டாடப்படுகிறது. கொரோனா என்ற பெயரில் உள்ள அரக்கன் உலகம் முழுவதும் பரவியுள்ளான். அவனை வெற்றி கொள்ள நாம் உறுதி ஏற்று வேலை செய்வதோடு சமுதாயத்தையும் அவ்வேலையை செய்ய வைக்க வேண்டும். நமது அடிப்படை வேலை மற்றும் வேலை முறை ஒரு வகையானது. நிகழ்ச்சிகள் வெவ்வேறுவிதமான தாக இருக்கலாம். ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் இரவு தங்களது விரிப்புகளுடன் வந்து ஓரிடத்தில் உறங்கி காலையில் புறப்பட்டு செல்வதும் ஸங்க வேலைதான் என்று டாக்டர் ஹெட்கேவார் கூறியுள்ளார். இது போல நமது ஸங்க வரலாற்றில் சில தடவைகள் நிகழ்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் ஷாகா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்யகர்த்தர் சந்தித்துக் கொண்டு இருந்தார்கள்.
  • நேற்று இரவு 12 மணியிலிருந்து வருகின்ற 21 நாட்கள் lock down அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை கடைப்பிடித்தால் தான் நமது வேலை சிறப்பாக நடக்கும். நாம் நமது வீட்டிற்குள் அல்லது ஒரு கட்டிடத்திற்குள் மிகக்குறைவான எண்ணிக்கையில் சேர்ந்து பிரார்த்தனை பாடலாம். நமது வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை பாடலாம். சாதாரண நாட்களில் ஆசார பத்ததி அனைத்தும் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் சேர்ந்து பிரார்த்தனை பாடுவதே போதுமானது. அத்தோடு நமது லட்சியத்தை மனதில் நினைவு கொள்ளலாம்.
  • மா. ஸர்கார்யவாஹ் அவர்கள் சில குறிப்புகள் கொடுத்துள்ளார். மேலும் சில குறிப்புகள் வரலாம். இந்த பெரிய எதிரியை தோற்கடிப்பதற்காக அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடன் நாம் இணைந்து செயலாற்றுவதற்கு அனுகூலமாகவே அக்குறிப்புகள் உள்ளன. அதனை நாம் முழுமையாக கடைப்பிடித்தல், சமுதாயம் முழுவதும் அதனை கடைப்பிடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை நாம் செய்ய வேண்டியவை. ஸர்கார்யவாஹ் அவர்களின் குறிப்புகளுக்கு முன்பாகவே பல ஸ்வயம்சேவகர்கள் விஷயங்களை கடைப்பிடிக்க துவங்கிவிட்டார்கள். அரசு, அதிகாரிகளின் அனுமதி, குறிப்புகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிவாரணப் பணிகள் செய்தல் ஆகியவற்றை ஸ்வயம்சேவகர்கள் துவக்கியுள்ளனர்.
  • இடங்கள் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவையானவற்றை கட்டுப்பாட்டோடு செய்வது அவசியம். இப்போரில் முக்கியமான விஷயம் முழு சமுதாயமும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது ஆகும். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை சமுதாயத்திற்கு கொண்டு செல்வது அவசியம் தான். ஆயினும் இக்காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நம்மை தனிமைப் படுத்திக் கொள்ளுவது (social distancing). இதுவே சமுதாய முழுமைக்குமான கடமையாகும். இதனை நாம் வெற்றிகரமாக கடைப்பிடிப்பதோடு சமுதாயத்தையும் கடைப்பிடிக்க செய்வதில் வெற்றி அடைய வேண்டும். நம்முடைய கடமைகளை சரிவர செய்வதோடு நமது சுயநலத்தை தள்ளிவத்து தேசத்திற்கு தேவையான விஷயங்களை செய்வது நமது பழக்கமாகி உள்ளது. இதற்கு சமுதாயமும் பழக வேண்டும்.
  • நமது பணி சேர்ந்து செய்வதுதனே, அது எப்போது சாத்தியமாகும் என்ற எண்ணங்கள் நமக்கு தோன்றலாம். ஆயினும் நமது பணி மனித நிர்மாணம்‌ மற்றும் பண்புப்பதிவுகளை ஏற்படுத்துவதாகும். இந்த சூழ்நிலையில் நமது பெரிய எதிரியை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நாம் நமது வேலை முறையினை சிறிது மாற்றிக்கொண்டு செய்வதற்கும் பழக வேண்டும். நமது உறுதியான செயல்பாட்டிலேயே மிகப்பெரிய சக்தி உருவாகிறது. சூழ்நிலையை கருத்தில் கொள்வதோடு நமது ஸ்வயம்சேவகத்வத்தையும் மனதில் இருத்தி நாம் பணி செய்ய வேண்டும். இந்தப் புத்தாண்டானது நமது சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் பிறந்த தினமும் ஆகும். ஆகவே இன்று நாம் அவருக்கு ஆத்ய ஸர்ஸங்கசாலக் ப்ரணாம் செலுத்துகிறோம். நம்முடைய இலட்சியத்தினை மனதில் இருத்தி சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல நமது வேலை முறையை மாற்றிக் கொண்டு நமது உறுதியான நடவடிக்கைகளின் மூலமும் சுய உதாரணங்களின் மூலமும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தங்களை மாற்றிக்கண்டு அதே நேரத்தில் ஏற்றுக் கொண்ட லட்சியத்திலிருந்து வழுவாமல் செல்லக்கூடிய பாங்கினை நாம் அறிவோம்.
  • விஷயங்களை மனதில் இருத்தி இன்று நம் முன் உள்ள பெரிய எதிரியை வெற்றிகரமாக வீழ்த்தும் பணியினை நாம் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
  • நாம் அனைவரும் சேர்ந்து இந்த நல்ல பணியினை வெற்றிகரமாக செய்து முடிப்போம் இவ்வாறு பேசியுள்ளார்.

Share it if you like it