அண்மையில் பார்த்த சாரதியின் கோவிலை இஸ்லாமியர் ஒருவர் OLX யில் விற்க முயற்சி மேற்கொண்டதை இறுதி நேரத்தில் இந்து அறநிலையத்துறை விழித்துகொண்டு அம்முயற்சியை தடுத்தது. இது போன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சொத்துக்கள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக கோவில்களை பற்றி சத்தியராஜ், ஜோதிகா, ஸ்டாலின், திருமா, வீரமணி, இன்னும் சில சில்லறை போராளிகள் மிகவும் கீழ்த்தரமாக, தங்கள் வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஹிந்துக்கள் மட்டுமே தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தில் இருந்து வரும் சம்பளத்தை கொண்டு வாழும் அறநிலையத்துறை ஊழியர்களோ, அதிகாரிகளோ, கோவிலை இழிவாக விமர்சிக்கும் நபர்கள் மீது வழக்கோ, கண்டனமோ, தெரிவிப்பது இல்லை. இதில் இருந்தே இந்து அறநிலையத்துறையின் நேர்மை என்ன? வென்பதை மக்களின் பார்வைக்கே விட்டுவோம். இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை என்ன? நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.