ஆலயம் தொழுவோம் ஆனந்தம் அடைவோம்!

ஆலயம் தொழுவோம் ஆனந்தம் அடைவோம்!

Share it if you like it

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் உள்ள ஆலயங்களை வழிப்பட்டாலே  வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

“கரு முதல் சதாபிஷேகம்” வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.

கரு உருவாக (புத்திரபாக்கியம்) – கருவளர்ச்சேரி.

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற – திருக்கருக்காவூர்.

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு – வைத்தீஸ்வரன் கோவில்.

ஞானம் பெற – சுவாமிமலை.

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர்.

எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க – பட்டீஸ்வரம்.

செல்வம் பெறுவதற்கு – ஒப்பிலியப்பன் கோவில்.

கடன் நிவர்த்தி பெற – திருச்சேறை சரபரமேஸ்வரர்.

இழந்த செல்வத்தை மீண்டும் பெற – திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீர – கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).

திருமணத்தடைகள் நீங்க – திருமணஞ்சேரி.

நல்ல கணவனை அடைய – கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.

மனைவி, கணவன் ஒற்றுமை பெற – திருச்சத்திமுற்றம்

பில்லி சூனியம் செய்வினை நீக்க – அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய – திருபுவனம் சரபேஸ்வரர்.

எம பயம் நீங்க – ஸ்ரீ வாஞ்சியம்.

நீண்ட ஆயுள் பெற – திருக்கடையூர்.

மறுபிறவி வேண்டாம் என நினைப்போர் – தேப்பெருமாநல்லூர்.

பாவங்கள் அகல – கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

 

(பி கு) காசியில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் நீங்கும், கும்பகோணத்தில் பாவம் செய்தால் கொட்டையூர் சிவன் ஆலயத்தில் நீங்கும். கொட்டையூரில் பாவம் செய்தால் கட்டையோடு தான் நீங்கும் அதாவது மரணம் அடையும் வரை நாம் அப்பாவத்தை அனுபவிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

 

 

 


Share it if you like it