இடைத்தேர்தலில் பா.ஜ.க முன்னிலை

இடைத்தேர்தலில் பா.ஜ.க முன்னிலை

Share it if you like it

கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடகாவில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலைபெற்று உள்ளது. பன்னிரண்டு தொகுதிகளில் பா.ஜ.கவும் ஒரு தொகுதியில் காங்கிரஸும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் பா.ஜ.க பெரும்பான்மையை பெறுவது உறுதியாகியுள்ளது. எடியூரப்பாவின் ஆட்சி கர்நாடகாவில் தப்பியுள்ளது.


Share it if you like it