அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்தனர். டிரம்பை கட்டியணைத்து அவர்களுக்கு பிரமாண்ட உற்சாக வரவேற்பை அளித்தார் பிரதமர் மோடி. அவர்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள காந்தி தங்கிய சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். பின் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மோடி பேசினார்கள். அதில் சிறு வயதில் டீ விற்ற மோடி இன்று நாட்டிற்கே பிரதமர் ஆகியிருக்கிறார். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் என் நண்பன் மோடி என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தியா மீது எங்களுக்கு எப்பொழுதுமே காதல் உண்டு. மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும் விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். மேலும் மஹாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரை பற்றியும் அதிபர் டிரம்ப் பேசினார்.
மோடி, அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது. தொழில் பரிமாற்றங்கள் இரு நாடுகளுக்கிடையே அதிகமாக இருக்க வேண்டும்.பேச்சை தொடங்கும் முன் மூன்று முறை நமஸ்தே டிரம்ப் என்று சொல்ல அனைவரும் கைதட்ட அரங்கமே அதிர்ந்தது.