இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உபியில் சிறப்பாக மக்களை வழிநடத்தும் யோகி ஆதித்யநாத் !

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உபியில் சிறப்பாக மக்களை வழிநடத்தும் யோகி ஆதித்யநாத் !

Share it if you like it

முதல்வர் யோகி ஆதித்யநாத் தரமான உணவு மற்றும் தரமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான என் – 95 முகக்கவசங்கள் ஆகியவை அனைத்து மருத்துவமனைகளுக்கும் செல்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக உ.பி-யில் 7,45,618 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் 14 கோடி மக்களுக்கு மற்றும் 3, 23,87,640 ரேஷன் அட்டைகள் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 முதல் பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனாவின் கீழ் 3,38,000 மெட்ரிக் டன்கள் அரசி 1 கோடியே 78 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் முதல்வர் ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டையும் மூத்த அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஹாட்ஸ்பாட் பகுதி வீடுகளும் கிருமி நாசினி தெளிக்கப்படவும், வீட்டுக்கே கொண்டு செல்லும் பொருட்கள் மீது கண்காணிப்பும், பால், காய்கனிகள், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோல் மற்ற மாநிலங்களை விட அதிக மக்கள்தொகை கொண்டபோதும் மேலும் இந்த கொரோனா நெருக்கடியான காலகட்டங்களிலும் மிக சிறப்பாக உபியில் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத் மக்களை வழிநடத்தி வருகிறார்.


Share it if you like it