உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தை, காங்கிரஸ் துணையுடன் சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற்றி தற்பொழுது தனது ஆதிக்கத்தை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்படுமாறு சீனா தனது புதிய கூட்டாளியை இன்று வரை தூண்டி வருகிறது.
சீனாவின் நாடு பிடிக்கும் கோர பசிக்கு மெல்ல மெல்ல நேபாளம் இறையாகி வருதை அந்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சீன பெண் தூதரின் பிடியில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு மக்களே குற்றம் சாட்டி வருகின்றனர். கொரோனா தொற்றுடன் இந்தியாவை இணைத்து பேசி உலக நாடுகள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது நேபாளம். இப்பொழுது சீனா, பாகிஸ்தான், தூண்டுல் பெயரில் ஷர்மா ஒலி பின்வருமாறு கூறியுள்ளார்.
ராமர் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு நேபாளி என்று ஷர்மா கூறியிருப்பது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் பண்டிர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், நேபாள மக்களே கூட இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.