இந்தியாவையே உருக்குலைய வைத்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வை கேலி செய்த நகைச்சுவையாளர் முனாவர் ஃபாரூகி !

இந்தியாவையே உருக்குலைய வைத்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வை கேலி செய்த நகைச்சுவையாளர் முனாவர் ஃபாரூகி !

Share it if you like it

  • கோத்ரா ரயில் எரியும் சம்பவம் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது. இதில் அயோத்தியில் இருந்து திரும்பிய 15 குழந்தைகள் உட்பட 59 ஹிந்துக்கள் முஸ்லீம் கும்பல்களால் எரித்து கொல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவையே உலுக்கிய பெரும் துயர சம்பவமாகும். இந்நிலையில் ஸ்டேன்ட் அப் நகைச்சுவையாளர் இஸ்லாமிய அடிப்படைவாதியான முனாவர் ஃபாரூகி என்பவர் இந்த துயர சம்பவத்தை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
  • அதில், “நான் டிவியில் எரியும் கோத்ரா ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தந்தை வந்து என்னிடம் இதுபோன்ற முட்டாள்தனங்களைப் பார்க்க வேண்டாம் என்று கூறி தொலைக்காட்சியை அணைத்துவிட்டார். கோத்ரா ரயில் எரிப்பு காணொளியானது ஆர்.எஸ்.எஸ் தயாரித்த அமித் ஷா இயக்கிய படம் என்றும்  கோத்ரா படுகொலை பற்றிய செய்திகளை ‘கார்ட்டூன்’ என்றும் குறிப்பிட்டார்.

https://twitter.com/IntrepidSaffron/status/1250423748278116353?s=20

  • தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இந்தியாவையே உருக்குலைய வைத்த ஒரு துயரமான நிகழ்வை கேலி செய்யும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. மேலும் பல ஊடகங்களில் நகைச்சுவை என்கிற பெயரில் ஹிந்து மதங்களை பற்றியும் ஹிந்துக்களை பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக பேசுகின்றனர். இதனால் பல ஹிந்துக்களின் மனம் புண்படுகிறது. இதுபோன்று தொடர்ந்து ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் தவறாக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • இதற்கு முன்னதாக , முனாவர் ஃபாரூக்கி மீது ராமர் மற்றும் சீதாவுக்கு எதிரான அவதூறான கருத்துக்களால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Share it if you like it