அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாதுதீன் ஒவைசி தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தியது.
அக்கூட்டத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவரான அமுல்யா லியோனா “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனை அடுத்து காவல்துறை அவரை கைது செய்து தீவிர விசாரனண மேற்கொண்டனர்.
நான் எப்படி பேசவேண்டும் என்றும், பயணத்திற்குரிய டிக்கெட்டை அவர்கள் முன்பதிவு கொடுத்தது மட்டுமில்லாமல், சுற்றுப்பயணத்திற்கு தேவையான அனைத்து நிதியுதவிகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் சி.ஏ.ஏ ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவும், ஆட்களை ஒருங்கினணத்து அழைத்து வர தனக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து இதுவரை அமுல்யா 2 லட்சம் செலவிட்டுள்ளார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்ற பழமொழிக்கு நல்ல உதாரணம் ஒவைசி என்று நெட்டிசன்கள் கலாய்த்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.