Share it if you like it
- கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீன துருப்புக்கள் நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அண்மையில் 2017 ஆம் ஆண்டு டோக்லாம் எபிசோடிற்குப் பிறகு மிகப்பெரிய இரு இராணுவங்களும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
- சீன இராணுவம் 2,000 முதல் 2,500 துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளதாகவும், படிப்படியாக தற்காலிக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் கூறப்பட்ட இரண்டு சர்ச்சைக்குரிய பகுதிகளான பாங்கோங்த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா தனது வலிமையை மேலும் அதிகரித்துள்ளது என்று உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
- “இப்பகுதியில் இந்திய இராணுவத்தின் வலிமை எங்கள் எதிரியை விட மிகச் சிறந்தது” என்று பெயர் கூற விரும்பாத ஒரு உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
- கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள டொலஹத் பெக் ஓல்டி சாலை இந்தியன் போஸ்ட் கே.எம் .120 உட்பட பல முக்கிய புள்ளிகளைச் சுற்றி சீன துருப்புக்கள் இருப்பது இந்திய இராணுவத்திற்கு சவாலாக உள்ளது. “இது தீவிரமானது, இது சாதாரண வகையான மீறல் அல்ல” என்று முன்னாள் வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடா
- பி.டி.ஐ. விவகார நிபுணர் அசோக் கே. காந்தாவும் லெப்டினென்ட் ஜெனரல் ஹூடாவுடன் கருத்திற்கு உடன்பட்டார். “(சீன துருப்புக்களால்) பல ஊடுருவல்கள் நடந்துள்ளன. இது கவலைக்குரிய ஒன்று. இது ஒரு வழக்கமான நிலைப்பாடு அல்ல. இது ஒரு சவாலான சூழ்நிலை” என்று காந்தா கூறினார்.
- டெமொக், டொலஹத் பெக் ஓல்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இந்திய துருப்புக்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி வட்டாரங்கள் கூறியுள்ளன.
- மே 5 ம் தேதி மாலை சுமார் 250 சீன மற்றும் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் சண்டையில் ஈடுபட்ட பின்னர் கிழக்கு லடாக்கின் நிலைமை மோசமடைந்தது. இது மறுநாள் வரை பரவியது. இதில் உள்ளூர் தளபதிகள் உள்பட இந்த வன்முறையில் 100 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சீன வீரர்கள் காயமடைந்தனர். மே 9 அன்று வடக்கு சிக்கிமில் இதேபோன்ற சம்பவமும் தொடர்ந்திருந்தது.
- கடந்த வாரம் சீன இராணுவம் தனது துருப்புக்களை கொண்டு இந்தியா மேற்கொள்ளும் சாதாரண ரோந்து பணிக்கு கூட தடையை ஏற்படுத்தியது சீனா என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. எல்லை நிர்வாகத்தில் இந்தியா எப்போதும் மிகவும் பொறுப்பான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது என்று ராணுவ உயர் அதிகாரி கூறியுள்ளார்.
- அண்மையில் மே 9 அன்று சிக்கிம் பகுதியில் உள்ள நாகு லா பாஸ் அருகே கிட்டத்தட்ட 150 இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் காயமடைந்தனர்.
- இந்தியா மற்றும் சீனாவின் துருப்புக்கள் 2017 ஆம் ஆண்டில் டோக்லாம் பகுதியில் 73 நாள் நேருக்கு நேர் சந்தித்து எல்லையில் நின்றிருந்தது. இது இரு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கும் இடையிலான போரைப் பற்றிய அச்சத்தை மக்கள் மத்தியில் தூண்டியது.
- டோக்லாம் நிலைப்பாட்டிற்கு சில மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் வுஹானில் ஏப்ரல் 2018 இல் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தினர்.
- உச்சிமாநாட்டில், இரு தலைவர்களும் தகவல்தொடர்புகளை வலுப்படுத்த தங்கள் ராணுவ வீரர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை” வழங்க முடிவு செய்தனர். இதனால் அவர்கள் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று இரு நாடுகளும் கருதியது.
- மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் தங்களது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it