இந்து தர்மம் சமத்துவத்தையும், மனிதத்தையும், மட்டுமே போதிக்கிறது..!

இந்து தர்மம் சமத்துவத்தையும், மனிதத்தையும், மட்டுமே போதிக்கிறது..!

Share it if you like it

நம் நாட்டின் பண்பாடு மிக எளியது. உணவு, கல்வி, வைத்தியம், நீதி போன்ற அடிப்படைத் தேவைகளை உச்சாணிக் கொம்பில் நிறுத்தி ஒரு நாகரீக சமூகத்தை வளர்த்தெடுத்தது.

விருந்தோம்பல் என்பது வெறும் உணவு படைத்தல் அல்ல. எல்லா நாடுகளிலும் உபசரிக்கும் கலாச்சாரம் இருக்கிறது. பாரதத்தின் விருந்தோம்பலில் உள்ள தனித்துவம், அது வெறும் உபசரிப்புடன் நிற்பதில்லை.

விருந்தினரை இறைவனுக்கு இணையாய்க் காணும் பண்பாடு நம்முடையது. ஓம்பல் எனும் சொல்லே பாதுகாத்தல், வளர்த்தல், வாழ்வித்தல் எனும் பொருள் தருவதே. அதன் பொருட்டே அக்காலத்தில் பிச்சை பெற்று உண்பவரை தவ வாழ்வு வாழ்பவருக்கு இணை வைத்த சமூகம் நம்முடையது.

கல்வியில் உலகிற் சிறந்த இருபத்தாறு பல்கலைக்கழகங்கள் நாடெங்கிலும் இருந்தன. தூர தேசங்களில் இருந்தெல்லாம் வந்து கல்வி பயின்று சென்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் போலி சாதி பிரிவினையை மேற்கொள்காட்டி அதை அனைத்தையும் அழித்து விட்டது. பின்னர் குமாஸ்தா வேலைக்கு மட்டுமே தகுதி பெற்ற மெக்காலே அடிமைக்கல்வி முறையினைக் கொண்டுவந்தனர், நாமும் பழகிவிட்டோம்.

15ஆம் நூற்றாண்டு வரை கூட வைத்தியம் என்பது இங்கே இலவசம் தான். தனது நோயாளிகளிடம் பணம் பெறுவதைப் பாவமாக கருதியவர்கள் வைத்தியர்கள். அவர்களது தேவைகளையும், சம்பளத்தையும் அரசே கவனித்துக்கொள்ளும்.

இந்த நிலை மாறியது முகலாய ஆட்சிக்குப் பின்னர்தான். தென்னாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சித்த, ஆயுர்வேத மருத்துவம் நசிந்து போனதற்கு முக்கியக் காரணம் அப்போதைய அரசிடமிருந்து போதுமான நிதி மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போனதே.

இதனை நான் சொல்லவில்லை, மருத்துவ ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் டாக்டர் H.ராய் அவர்களது ‘இந்திய மருத்துவ வரலாறு’ எனும் ஆய்வறிக்கை சொல்கிறது.

அதேபோல இங்கே வழக்கும் நீதியும் இலவசமாகவே கிடைக்கப் பெற்றது. கிராமப் பஞ்சாயத்தின் அத்தியாவசியத்தை காந்தி வலியுறுத்தியதன் முக்கியக்காரணம் நம் நாட்டில் இருந்த நீதி வழங்கும் முறையே. கிராம அதிகாரியே வழக்கை விசாரித்து உடனுக்குடன் தீர்ப்பு வழங்கும் முறை காலங்காலமாய் இருந்த ஒன்று. அத்தீர்ப்பில் நியாயம் பெறவில்லையென்றால், மன்னரின் நீதி சபைக்கு எடுத்துச் செல்லலாம். அங்கும் இலவசம் தான்.

மேலே சொன்ன நான்கும் ஒரு சாமானியனுக்கு, கவனிக்க – பாகுபாடே இல்லாமல் எல்லா சாதியினருக்கும் கிடைக்கும் வகையிலே முற்றிலும் இலவசமாக இருந்த விஷயங்கள். இந்த மண்ணின் பாரம்பரியம் இந் நான்கையும், வீசும் காற்றைப்போல, ஓடும் ஆற்று நீரைப்போல ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக பாவித்தது. இதற்கு காசு வாங்குவதை பெரும் பாவமாகக் கருதியது.

இப்படிப்பட்ட செல்வ செழிப்புமிக்க மக்கள் வாழும் சமூகமும், மண்ணின் ஆன்மிகமும், கல்வி கேள்வி ஞானமும் இருந்ததால்தான் கஜினி கோரி முதலான கொள்ளையர் தொடங்கி, முகலாயர், போர்த்துகீசியர், ஆங்கிலேயர் வரை வரிசையாக நம் தேசத்தின்மீது படையெடுத்தனர்.

அதன்பிறகு வந்ததே நிஜமான மன்னராட்சி. கிறுக்கு ராஜாக்களின் கொடுங்கோல் ஆட்சி. அடக்குமுறைகள் நிறைந்த நிலப்பிரபுத்துவ முறை ஆட்சி. தொழில்முறை அடையாளமாக இருந்த வர்ணம், பிறப்பால், நிறத்தால், வர்க்கத்தால் ஆன சாதியவாதம் என்றது எல்லாம் அதன்பிறகே.

நன்கு முதிர்ச்சியடைந்த ஒரு நாகரீக சமூகமாக இந்தியா இருந்த காலத்தில், உலகின் பிற நாடுகள் எல்லாம் முற்றிலும் மாறான ஒரு மோசமான வாழ்வியல் முறையையே கொண்டிருந்தன, மனித அடிமைத்தனம் உட்பட.

மார்க்ஸியம், கம்யூனிஸம்,  எல்லாம் அத்தகு சமூகத்தில் அக்காலத்தின் தேவைக்கேற்ப உற்பத்தியான ஒரு தற்காலிக சித்தாந்தமே. இந்த சித்தாந்தம் தேவைப்பட்ட இடமும் களமும் முற்றிலும் வேறு.

கொடுங்கோலுக்கு எதிரான தொடர் புரட்சிகளால் ஈர்க்கப்பட்ட ஐரோப்பியர்கள் இச்சித்தாந்தங்களை வளர்த்தெடுத்தார்கள். அதே சமயம், இந்திய மரபணுவில் அடிமை சமூகம் என்பது அறவே கிடையாது. நிற பேதம் என்பதே இல்லாது கருப்பு நிற காளியும், திரௌபதியும் கடவுளாக வணங்கப்படுகின்ற தேசம் இது.

மேற்கைப்போல இங்கே மன்னன் என்பது பிறப்புரிமை கிடையாது. ஒருவன் பட்டாபிஷேகம் பெரும் முன்னர் மன்னனுக்கான சகல தகுதிகளையும் பெறுவது அவசியம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் உணர்த்துவது ஒன்றையே. இந்து மதம் என அழைக்கப்படும் இந்த மண்ணில், மரபு சார்ந்த ஆன்மிகம் என்பது சமத்துவத்தையும் மனிதத்தையும் சார்ந்தே இயங்கிய சமூகம் இது.

மாறாக மார்க்ஸியமும் கம்யூனிஸமும் அதன் சாயலில் வளர்ந்த திராவிடமும் நமக்கு போதிப்பது வெறும் ‘உரிமை’ மட்டுமே. உரிமை என்பது சமத்துவத்தையும் மனிதத்தையும் வளர்க்கும் கடமையில் இருந்தே பெறப்படுவது என்பதை ஒருபோதும் அது போதிப்பதில்லை.

அதன் ஒரே இலக்கு, இங்கிருக்கும் மனிதர்கள் எல்லாம் வெறும் ஓட்டுகள் என்றே அறிகின்றன. அது சிந்தாமல் சிதறாமல் பெறப்படும் இடம் எதுவோ, அதனை அனுதினமும் போஷாக்கூட்டி வார்த்தெடுக்கின்றன. இன்று சிறுபான்மை ஆதரவு அரசியல் என்பதன் அர்த்தம் அது மட்டுமே.

அதன் விளைவுகளே டெல்லி வன்முறை, பெங்களூரு கலவரம் என ஓயாமல் தொடர்கின்றன. கண்டிக்க மறுக்கின்றன.

இன்றைய உலகில் கம்யூனிஸ, திராவிடம் என்பது கொடும் வைரஸாக மட்டுமே விரவியிருக்கின்றன. ஏழ்மை, வன்முறை, பயம், அடக்குமுறை, துயரம் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் தொற்றி ஆக்கிரமிக்க இடம் தேடி அலைகின்றன. இவைகள் ஒழிந்துவிட்டால் அந்த வைரஸால் வாழ முடியாது.

மீண்டும் சொல்கிறேன், இந்த வைரஸை அழிக்க இம்மண்ணின் பாரம்பரிய மரபு சார்ந்த நீதி நெறி, சமத்துவம் என்னவோ அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். அதுவே இவ் வைரஸை தடுக்கும் மாற்று மருந்து.

அறிவியலும் ஆன்மிகமும் உண்மையான சமூக நீதியும் சார்ந்த அரசியல் தலையெடுக்கும் பொழுது இந்த வைரஸ்கள் தானாக அழித்து ஒழிக்கப்படும். அதனாலேயே சனாதன அரசியலையும் ஆன்மிக அரசியலையும் அவை வலுவாக எதிர்க்கத் துடிக்கின்றன.

மார்க்ஸிய, சோஷலிஸ, கம்யூனிஸ, திராவிட சித்தாந்தவாதிகள் ஏன் எப்பொழுதும் இந்து மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள் எனும் கேள்விக்கு விடை மிக எளிது.வைரஸ்கள் அதன் தடுப்பு மருந்தை விரும்புமா என்ன? நிச்சயம் இல்லை, அது தாக்கி அழிக்கவே முனையும்


Share it if you like it