இனி விவாதம் என்கிற பெயரில் பிரதமரை இழிவாக பேசினால் அதே பாணியில் பாஜகவினர் திருப்பி அடிக்க வேண்டும். ஹெச். ராஜா ஆவேசம்!

இனி விவாதம் என்கிற பெயரில் பிரதமரை இழிவாக பேசினால் அதே பாணியில் பாஜகவினர் திருப்பி அடிக்க வேண்டும். ஹெச். ராஜா ஆவேசம்!

Share it if you like it

அண்மையில் நீயூஸ் 7 டிவி விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி மற்றும் பாஜக பொறுப்பாளர் கரு.நாகராஜன் இடையே கடுமையான வார்த்தை போர் நிகழ்ந்தது. ஜோதிமணி பாரதப் பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பாஜக பொறுப்பாளர் கடுமையாக தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டு விட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்


Share it if you like it