Share it if you like it
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 51 சதவீத வாக்குகள்பெற்று வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தபின், முன்னாள் அதிபரும் கோத்தபாயவின் மூத்த சகோதரருமான மஹிந்தாவை பிரதமராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது இலங்கை தமிழர்களிடையே ஒருவித அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
Share it if you like it