ஈரான் ஈராக் மீது விமானங்கள் பறக்க தடை!

ஈரான் ஈராக் மீது விமானங்கள் பறக்க தடை!

Share it if you like it

ஈரான் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரான், ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் பறக்க அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவசரகால தடை விதித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரான்-சவுதி அரேபியா இடையேயான நீர்நிலைகள், வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் இயங்குவதை தடை செய்வதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Share it if you like it