உச்சம் தொட்டவர்களின் வார்த்தை போர் !

உச்சம் தொட்டவர்களின் வார்த்தை போர் !

Share it if you like it

தமிழ் திரை உலகில் கமல், ரஜினி, என்னும் 3 எழுத்து மந்திர சொல் உச்சரிக்காத வளர்ந்து வரும் நடிகர்களோ, ரசிகர்களோ யாரும் இருக்க முடியாது. இவ்விரு ஜாம்பவான்கள் தமிழ் படங்களை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது யாரும் மறுக்க முடியாது.

கமல் கட்சி தொடங்கி மறைமுகமாக ரஜினியை விமர்சிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கமல் நேரிடையாகவே எங்கோ பிறந்த ரஜினி தமிழ்நாட்டில் நல்ல நிலையில் இருப்பதால் அவர் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் நானும் தமிழ்நாடுதான், நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரி டிஸ்ரிக்ட் என்ற டயலாக் கூறியிருப்பார். ரஜினியின் அப்பா பிறந்தது  அந்த மாவட்டம் என்பதும்  அவரின் உறவினர்கள் இன்றும் அங்கு தான் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகத்து.


Share it if you like it