பிரபல நடிகை ஜோதிகா அவர்கள் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது கூறியதாவது.
”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் செல்ல முடியவில்லை. மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம்.
அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவற்றிற்கும் கொடுங்கள் என்று பேசினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஹிந்து தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர் பொதுவாக கருத்து தெரிவித்து இருந்தால் மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்திருக்காது. கோவிலை பற்றி சொல்லும் போது தேவாலயம், மசூதிகளையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே. ஏன்? கோவிலை மட்டும் சொல்ல வேண்டும். நடிகர் சூர்யா குடும்பம் கோவிலை மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்டு தாக்குவது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஈ.வெ.ரா-விற்கு 100-கோடியில் சிலை அமைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. கோவிலுக்கு செலவு செய்வதை விட மருத்துவமனைகளுக்கு செலவு செய்யலாம் என்று அறிவுரை கூறிய ஜோதிகா அவர்கள் பல அரசு பள்ளிகள் பாழ் அடைந்துள்ள நிலையில் ஈ.வெ.ரா-விற்கு சிலை அவசியமா? என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்ப முன்வருவாரா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.