சகோதரத்துவம், மனிதாபிமானம், அன்பு, கருணை ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. அண்மை காலமாக சில தீய நோக்கம் கொண்ட மனிதர்கள், இந்தியாவை பற்றியும், ஹிந்துக்களை பற்றியும் தவறான புரிதலோடு, சமூக
வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு சில ஊடகங்கள், பத்திரிகைகள், அரசியல்வாதிகள் தூபம் போடுவதற்கு மக்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் 12 ஜனாதிபதிகளில், ஜாகிர் ஹுசைன், ஃபக்ருதீன் அலி அகமது, மற்றும் அப்துல் கலாம், ஆகிய மூன்று இஸ்லாமியர்கள், நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்துள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்லாமியர்கள் மத்தியிலும், மாநிலத்திலும், உயர்ந்த பதவிகளில் பணியாற்றியுள்ளனர்.
முகமது ஹிதாயதுல்லா, அஜீஸ் முஷாபர் அஹ்மதி, மிர்சா ஹமீதுல்லா பேக், மற்றும் அல்தாமாஸ் கபீர், ஆகியோர் இந்திய தலைமை நீதிபதி பதவியில் இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மற்றும் நாட்டின் உயர்ந்த பதவிகளில் இடம் பெற்றுள்ளனர.
டாக்டர் எஸ். வை. குரைஷி இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இன்னும் பலர் இந்தியர்களாகவும், சகோதரர்களாவும் உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.