(MAKE IN INDIA) திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே ரயில் இன்ஜின் தயாரித்து உலகின் ஆறாவது நாடு என்கின்ற பெருமையை இந்தியா சமீபத்தில் எட்டி பிடித்துள்ளது. தற்பொழுது கேரளாவில் கட்டுமான பணியில் உள்ள விமானம் தாங்கிய போர் கப்பல் அடுத்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் பொழுது உலகின் 6 நாடு என்கின்ற ஒரு பெருமையை மீண்டும் இந்தியா அடைய உள்ளது.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.
இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்று பெயர் எடுக்க கூடாது. அது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்கின்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1271395355767132165
