பங்களாதேஷில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 26 வரை அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 25 வரை அரசு நீட்டிப்பு செய்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி பிராமன்பாரியா மாவட்டத்தில் உள்ள பெர்டோலா கிராமத்தில் உள்ள ஜாமியா ரஹ்மானியா மதரஸாவில் மௌலானா ஜுபேயர் அஹமத் அன்சாரியின் இறுதி சடங்கில் 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று குழம்பி தடுமாறினர் காவல் துறையினர். நோய்த்தொற்றின் பரவலை புரிந்துகொண்டு வீட்டிலேயே இருக்குமாறு நாங்கள் பலமுறை மக்களை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசாங்கத்தின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். மக்கள் வீட்டில் தங்கவில்லையெனில், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு சுகாதார அமைச்சர் ஜாஹித் மாலெக் கூறியுள்ளார்.
source : swarajya