யூடூப் தளத்தில் டெக் பிரிவில் ‘அன்பாக்சிங்’ வீடியோக்கள் மிகப்பிரபலம். இந்த அன்பக்சிங் வீடியோக்கள் மூலம் ரியான் காஜி என்ற சிறுவன் ஒருவன் கோடீஸ்வரனாகியுள்ளான். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இவனது பெயரும் இடம்பெற்றுள்ளது. எட்டுவயது மட்டுமே நிரம்பிய ரியான் காஜி, யூடூப் மூலம் ஆண்டுக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளான்.
இது இந்திய மதிப்பில் 184.4 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு ‘ரியல் வேர்ல்ட்’ என்ற யூடூப் சேனலை ரியானின் பெற்றோர் தொடங்கினர். தற்போது இந்த சேனலானது 22.9 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களை கொண்டுள்ளது. ரியானின் ஒவ்வொரு வீடியோவும் 30 மில்லயன் பேரால் சராசரியா பார்க்கப்படுகின்றது.
ரியான் புதிதாக வெளிவரும் டெக் பொருட்களை அன்பாக்சிங் செய்து அதனை அவனுக்கே உரிய முறையில் விளக்குவது அனைவரையும் கவர்ந்துள்ளது. ரியான் கடந்த ஆண்டும் 141 கோடி ரூபாயை யூடூப் வருமானம் ஈட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.