எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மோடி- சரவெடி பதில்!

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மோடி- சரவெடி பதில்!

Share it if you like it

அரசின் திட்டங்களை  ஏன் இவ்வளவு தீவிரமாக செயல்படுத்துகிறீர்கள்? எல்லா வேலைகளையும்  விரைவாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் உங்களின்  நோக்கம் தான் என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின இதற்கு மக்களவையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

நாங்கள் பழைய வழிகளின் படி  பணியாற்றியிருந்தால்-ராமர் கோவில் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும்.. இந்தியா-பங்களாதேஷ் நில ஒப்பந்தம் இருக்காது, 370 ரத்து செய்யப்பட்டு இருக்காது, டிரிபிள் தலாக் காரணமாக முஸ்லீம் சகோதரிகளின் துன்பத்திற்கு தீர்வு கிடைத்திருக்காது.

குடியுரிமை திருத்த சட்டம் வந்திருக்காது, அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களின் துயரத்திற்கு தீர்வு ஏற்பட்டிருக்காது, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலத்திற்கு வழி ஏற்பட்டிருக்காது. என்று எதிர்கட்சிகளின் கேள்விக்கும்  காங்கிரஸின் தவறிற்கும்  மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(பிகு) பா.ஜ.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளில் 95% மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றி விட்டது.


Share it if you like it