ஐபிஎல் வீரர்கள் ஏலம், பட்டியல் வெளியீடு.!

ஐபிஎல் வீரர்கள் ஏலம், பட்டியல் வெளியீடு.!

Share it if you like it

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான பட்டியலை ஐபிஎல் நிர்வாக கமிட்டி வெளியிட்டுள்ளது. 997 வீரர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து 332 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 186 இந்திய வீரர்களும் 146 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். வெளிநாட்டு வீரர்களில் கிளென் மேக்ஸ்வேல், டேல் ஸ்டெய்ன், மார்ஷ், கிறிஸ் லின் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய வீரர்களில் ராபின் உத்தப்பாவிற்கு அடிப்படை விலையாக 1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  


Share it if you like it