ஐயப்ப பக்தர்களின் மாலையை அறுத்து மண்டையை உடைத்த டோல்கேட் ஊழியர்கள்!-கைது செய்யுமா காவல்துறை?

ஐயப்ப பக்தர்களின் மாலையை அறுத்து மண்டையை உடைத்த டோல்கேட் ஊழியர்கள்!-கைது செய்யுமா காவல்துறை?

Share it if you like it

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் ஐயப்ப பக்தர்கள் நெரிசல் இருந்ததால் 3வது தடத்தில் சென்றனர்.அப்போது ஊழியர்கள், ‘இது பாஸ்டேக் கட்டணதாரர்கள் செல்லும் வழி. நீங்கள் சென்றால் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்’ என கூறினர்.
‘ஜன. 15 முதல்தான் பாஸ்டேக் அமலுக்கு வருகிறது. நீங்கள் இப்போதே இருமடங்கு கட்டணம் கேட்கிறீர்களே’ நீங்கள் இந்தியாவில்தானே இருக்கிறீர்கள் என வேன் டிரைவர் கேட்டார்.அதற்கு அந்த டோல்கேட் ஊழியர்கள் இல்லை நான் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறேன் என்று கோபமாக கூறினார். இதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஐயப்ப பக்தர்களின் புனிதமான மாலையை டோல்கேட் ஊழியர்கள் கைகளால் அறுத்து எறிந்தனர்.அதுமட்டுமல்லாமல் ஐயப்ப பக்தர்களின் மண்டையை உடைத்திருக்கிறார்கள்.
பாஸ்டேக் அமல் ஆவதற்கு முன்பே டோல்கேட் ஊழியர்கள் ஐயப்ப பக்கதர்களிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலில் ஈடுபட்ட டோல்கேட் ஊழியர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க,பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் டோல்கேட் நிர்வாகத்தை தட்டிக்கேட்க இந்து அமைப்புகள் போராடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Share it if you like it