புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய எல்லையில் புகுந்த பாகிஸ்தான் ராணுவ விமானத்தை விரட்டிய பொழுது, இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் அந்நாட்டிற்குள் விழுந்து விட்டார். சர்வதேச நாடுகள் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக இந்திய விமானியை பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இதற்கு தமிழகத்தில் உள்ள சுந்தரவள்ளி, குஷ்பு போன்றவர்கள் இம்ரான் கானை வான் அளவு புகழ்ந்தும். பாரதப் பிரதமர் மோடியை மிகவும் இழிவாகவும், அர்த்தமற்ற முறையிலும் தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
”பாகிஸ்தான் அனுமதி பெறாமலேயே பின்லேடனை அமெரிக்கா ராணுவம் கொன்றுள்ளது. இது நமது நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். இன்று வரை உலக நாடுகள் சந்தேகத்துடனே நம் நாட்டை பார்க்கிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.
மனித தன்மையற்ற கொடூர பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி போல் இம்ரான் கான் பேசி இருப்பதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்குள்ள இம்ரான் கான் ஆதரவாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?