நான் ஒரு சிறு விவசாயி, பணக்காரன் அல்ல ஆனால் என்னிடம் உள்ள ஒரு சப்பாத்தியில் பாதியை பிறருக்கு என்னால் கொடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உலகையே துரத்தி, வரும் நிலையை கருத்தில் கொண்டு, பாரதப் பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவு, பிறப்பித்ததை அடுத்து. தொண்டு உள்ளம் கொண்ட மக்கள், ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, போன்ற அமைப்புகள், பல தொண்டு நிறுவனங்கள், ஏழைகள் இருக்கும், இடங்களுக்கே சென்று கிருமி நாசினி, முககவசம், உணவுகளை வழங்கி வருகிறது.
நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்த ஒரு விவசாய தம்பதி, தனது 3 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட கோதுமையை ஏழை, எளியவர்களுக்கு, தானமாக வழங்கி வருகின்றனர்.
நிலத்தின் உரிமையாளரான தத்தா ராம் பாட்டீல், “நான் ஒரு சிறு விவசாயி. நிதி வழங்கும் அளவிற்கு நான், வசதியானவன் இல்லை. ஆனால் என்னிடம் உள்ள ஒரு சப்பாத்தியில், பாதியை பிறருக்கு என்னால் கொடுக்க, முடியும் என்று அவர் கூறியுள்ளார். ஆதிசங்கரர் சிறுவனாக, இருக்கும் பொழுது கேரள மாநிலம் காலடியில், உள்ள ஒரு வீட்டில் பிச்சை கேட்டு நின்றார். அந்த குடும்பமோ பல நாள் பசி, பட்டினியில், இருந்த இக்கட்டான நேரம் அது. ஆனால் அந்த வீட்டில் இருந்த தாயோ சிறிது நேரம் கழித்து, ஒரு பக்கம் அழுகிய நிலையில் இருந்த, ஒரு நெல்லிக்கனியை தானமாக வழங்கினார்.
மிகப்பெரிய ஞானி என்று சீன, மக்களால் அழைக்கப்பட்டவர் கன்ஃபூசியஸ். இவர் தனது சீடர்களுக்கு, நீங்கள் எல்லாம் இப்பிறவியில், தானம், தர்மம், என்று நிறைய புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்த பிறவியில் புண்ணிய, பூமியான பாரத தேசத்தில் பிறக்கும் பாக்கியம், கிட்டும் என்று தனது, சீடர்களுக்கு அறிவுரை வழங்கியதாக செவி வழி செய்தி, ஒன்று கூறுகிறது. எனவே நாமும் பிரதமர், முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க தங்களால் இயன்ற நிதியினை வழங்குவோம் என்று மீடியான் கேட்டுக்கொள்கிறது.