ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!

Share it if you like it

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியானது அடுத்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. பல்வேறு பிரிவுகளில் விளையாட்டுபோட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஹாக்கி போட்டிகளுக்கான அட்டவணை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி நியூசிலாந்தை ஜூலை 25 ஆம் தேதியும், ஆஸ்திரேலியாவை ஜூலை 26 ஆம் தேதியும் ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜப்பான் முறையே 28, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது. புவனேஷ்வர் நகரில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றது. இந்திய அணி ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it