ஓட்டுனர்களுக்கு பழைய உணவை அளித்ததால் கடுங்கோபம் –  காங்கிரஸ் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய ஓட்டுனர்கள் !

ஓட்டுனர்களுக்கு பழைய உணவை அளித்ததால் கடுங்கோபம் – காங்கிரஸ் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய ஓட்டுனர்கள் !

Share it if you like it

  • ராஜஸ்தானில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலமான உபிக்கு செல்வதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தான் 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக உபி முதல்வரிடம் தெரிவித்தார். உபி முதல்வரும் இதற்கு அனுமதி அளித்து பேருந்துகள் அவற்றின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் பிரியங்கா காந்தி ஆயிரம் வாகனங்களை எப்படியோ ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேருந்துகள் 200 மட்டுமே மற்றவை எல்லாம் லாரி, ஆட்டோ ரிக்ஷகளாக இருந்தது. மேலும் உபி முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேருந்துகளின் விவரங்களை ஆன்லைன் தரவு மூலம் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் ஆன்லைன் தரவுத்தளம் பிரியங்கா காந்தி அனுப்பிய ‘பேருந்துகளில் பல பேருந்துகள் உண்மையில் பிற உரிமையாளர்களின் பேருந்துகள் என்பதை வெளிப்படுத்தியது.
  • இந்நிலையில் ஏபிபி செய்தியின்படி, பஸ் ஓட்டுநர்கள் அசோக் கெஹ்லோட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர். உத்தரபிரதேசம்-ராஜஸ்தான் எல்லையில் காங்கிரஸ் எதிர்ப்பு கோஷங்களை ஓட்டுனர்கள் எழுப்பினர்.
  • இந்த ஓட்டுநர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். இந்த ஓட்டுநர்கள் மூன்று நாட்களாக எல்லைகளில் சிக்கியுள்ளதாகவும், உணவுப் பற்றாக்குறை இருப்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.. அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் ஒருவேளை கொடுக்கப்பட்டால் அது பழைய உணவாக இருக்கிறது என்றும் ஏபிபி செய்தி தெரிவிக்கிறது.

  • கொரோனா நெருக்கடியினால் சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஆனால், நாங்கள் அனைவரும் உணவில்லாமல் இங்கே மிக இழிவாக நடத்தப்படுகிறோம். எங்களுக்கு குழந்தைகளும் குடும்பமும் இல்லையா? என ஒரு ஓட்டுநர் ஆதங்கத்துடன் கேட்டார். மேலும் இந்த ஓட்டுநர்கள் யாரும் பாதுகாப்பு முகமூடிகளை அணியவில்லை அல்லது சமூக தூரத்தை பராமரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it