ஓட்டுப்போட அலைபேசி போதும் -டெல்லி சட்டசபை தேர்தல்!

ஓட்டுப்போட அலைபேசி போதும் -டெல்லி சட்டசபை தேர்தல்!

Share it if you like it

டெல்லியில் நடக்கின்ற சட்டசபை தேர்தலையொட்டி வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்து விட்டவர்களுக்கு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அவர்களுக்காக ‘க்யூஆர்’ கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் இந்த வசதி அறிமுகம் ஆகிறது.

இதன்படி, அத்தகைய வாக்காளர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், வாக்காளர் உதவி மைய செயலியில் (ஆப்) இருந்து ‘க்யூஆர்’ கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ‘ஸ்கேன்’ செய்துவிட்டு, ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ள பகுதிக்கு சற்று தள்ளி ஸ்மார்ட்போனை வைத்து விட்டு ஓட்டு போட வேண்டும் என்று தேர்தல் அதிகாரி ரன்வீர்சிங் தெரிவித்துள்ளார்.


Share it if you like it