பாரத தேசம் மற்றும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் மிகவும் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி வரும் வெள்ளி கிழமையன்று கொண்டாட பட உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வரும் இவ்வேளையில் அவர்களின் வழிபாட்டு உரிமையிலும் தலையிட முயல்வது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டு போடாத ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இன்னும் சில நாடுகளை சேர்ந்த மக்களுக்கு ஆதரவாக குடியுரிமை திருத்த சட்டத்தை மிக கடுமையாக எதிர்த்து கோலம் போட்ட சமூக நீதி போராளி திருமா.
தன்னை நம்பி ஓட்டு போட்ட ஹிந்துக்களின் விழாவிற்கு (விநாயகர் சதுர்த்தி) அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தாரா? அல்லது ஹிந்துக்களுக்காக கொடி பிடித்து கோஷம் எழுப்ப முன்வந்தாரா?
தேர்தல் சமயத்தில் மட்டும் ஆலயம் செல்வதும், தேர்தல் முடிந்த பின்பு சனாதனத்தை அழிப்பேன் என்று கூறும் இவரை போன்றவர்களின் உண்மையான சுயரூபத்தை அப்பாவி ஹிந்துக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் என்று பலர் தங்கள் உணர்வுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.