காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைத்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வி. பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இதுவரை ஒரே ஒரு தமிழக மீனவர் மட்டுமே சுட்டு கொள்ளப்பட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே..
இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவை தி.மு.க அரசு தாரை வார்க்காமல் இருந்திருந்தால் ஒரு மீனவர் கூட தமது உயிரை இன்று இழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் தமிழக முதல்வர் பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுச் சொத்துக்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யவில்லை குத்தைக்கு மட்டுமே விட்டு உள்ளது.
இதன் முழு உரிமையையும் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும் என்பதை மிகத் தெளிவாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு பேசியுள்ளார். வழக்கம் போல தமிழக மக்களை திசை திருப்பும் நோக்கில் கச்சத்தீவை தாரை வார்த்த விடியல் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி பேச அருகதை இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.