கடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும் சீமான் !

கடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும் சீமான் !

Share it if you like it

  • நேற்று முன் தினம் 50 தொழிலதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன்களை ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா தள்ளுபடி செய்ததாக பொய்யான செய்தியை தினகரன், தினத்தந்தி , one india போன்ற பத்திரிகைகள் மற்றும் சில ஊடங்களும் வெளியிட்டது.
  • இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று தெளிவான விளக்கம் அளித்தனர். மேலும் பாஜகவை சேர்ந்த பல உறுப்பினர்கள் இதற்கு விளக்கம் அளித்து சமூக வலைத்தளங்களில் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டனர்.
  • மேலும் இந்த செய்தியை, கடனை தள்ளுபடி செய்து விட்டதாக வேண்டுமென்று பொய்யாக திரித்து ஆவணமாக தயாரித்து, அதை சரியான ஆவணம் போன்று வெளிப்படுத்தி அவதூறான கொச்சையான ஒரு செய்தியை பரப்பிய ஊடங்கங்கள் மீது வழக்கறினர் அஸ்வத்தாமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாட்டில் ஏழை எளிய மக்கள் ஊரடங்கினால் பசி பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால் தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயினைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது என்று மத்திய அரசுக்கு எதிராக தன் பங்குக்கு குற்றம் சாட்டியுள்ளார்.
  • மீடியாக்களின் இந்த செய்தியால் மக்கள் முதலில் குழம்பி போயிருந்தாலும் மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளித்த பின்னர் மக்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்தபோது பேசாமல் ஊமையாக இருந்துவிட்டு யாராவது எதிர்ப்பு காட்டினால் அப்பொழுது கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவோம் என்று நினைத்து, தற்போது பெரிய சர்ச்சையாக மாறி பின்னர் அது அமைதி நிலைக்கு திரும்பிய நிலையில் சீமான் தற்போது மத்திய அரசுக்கு எதிராக கம்பு சுற்றியிருப்பது மக்களுக்கு ஒருபக்கம் கோபத்தை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு நிலையில் பொழுதுபோகாமல் வீட்டிலிருக்கும் மக்களுக்கு நகைசுவை செய்வதற்கு சீமான் கிடைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் சீமானை சமூக வலைத்தளங்ளில் கஞ்சி காய்ச்சி வருகின்றனர்.

Share it if you like it