கடவுள் போல் எங்களை காப்பாற்றினீர்கள் என்று கண்ணீரோடு ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகருக்கு நன்றி தெரிவித்த  இஸ்லாமிய குடும்பம் !

கடவுள் போல் எங்களை காப்பாற்றினீர்கள் என்று கண்ணீரோடு ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகருக்கு நன்றி தெரிவித்த இஸ்லாமிய குடும்பம் !

Share it if you like it

  • குஜராத்தின் சூரத் நகரில் நெசவு தொழிலை செய்து வருபவர் நூர் முஹம்மது. இவரது மனைவி இஷ்ரத் முஹம்மது. இவர்களுக்கு 3 வயதில் முகமது நுமன் என்ற ஒரு மகன் உள்ளார். அரசானது கொரோனா நோய் தொற்றினால் ஊரடங்கு அறிவித்த நிலையில் வருமானமின்றி குஜராத்தில் நூர் முஹம்மது குடும்பம் சிக்கி தவித்தது. இதனால் கால் நடையாகவே தனது சொந்த மாநிலமான உபி க்கு செல்ல தயாராகின்றனர். மேலும் இதில் நூர் முஹம்மது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மே 7 ஆம் தேதி காலை, தம்பதியினர் நெடுஞ்சாலை வழியாக ஜல்கானை அடைந்தனர். இஷ்ரத் தனது பிரசவ வலியைத் தாங்க முடியாமல் வழியிலேயே கதறினார்.
  • இந்த விஷயம் சில உள்ளூர் மக்களின் கவனத்திற்கு வந்தபோது, ​​இதுபோன்ற பல சம்பவங்களில் மக்களுக்கு உதவிய அருகிலுள்ள ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான காவி காசரை அழைத்தனர். காவி காசர் உடனடியாக அருகிலுள்ள ஆம்புலன்சில் தேவையான உணவுப் பொருட்களுடன் அந்த இடத்தை அடைய முயன்றார். அந்த சமயத்தில், இஷ்ரத்துக்கு இரத்தப்போக்கு வரத்தொடங்கியதை அடுத்து மயக்கமடைந்தார்.  மருத்துவ உதவி வழங்க யாரும் கிடைக்காததால், ஆம்புலன்சில் குழந்தையை பிரசவிக்க காசர் அந்தப் பெண்ணுக்கு உதவினார். ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பிறந்துவிட்டது. பாதுகாப்பான பிரசவத்திற்கு பிறகு இஷ்ரத் மற்றும் அவரது பிறந்த குழந்தை, கோதாவரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனர்.
  • சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால், விஷயங்கள் சிக்கலாகி, தாய் குழந்தையின் உயிருக்கு அதிக ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறி ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகரான காசரை மருத்துவர்கள் பாராட்டினர். இதை கேட்ட நூர் முஹம்மது மற்றும் அவரது மனைவி கடவுள் போல் வந்து எங்களை காப்பாற்றினீர்கள் என்று கண்ணீருடன் தங்களது நன்றியை ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர் காசருக்கு தெரிவித்தனர்.

Share it if you like it