சீன கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை மறைத்து இன்று உலக நாடுகள் மத்தியில் தலை கவிழ்ந்து நிற்கும் நிலை சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது பல தொழிற்சாலைகள் சீனாவை விட்டு வெளியேற துவங்கி விட்டன. இதனால் சீன மக்கள் தங்கள் வேலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
பிரபல எழுத்தாளரும் தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருபவருமான கார்டன் ஜி. சாங் அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்.
”சீனா தற்பொழுது கடும் துன்பத்தில் உள்ளது., அதன் பொருளாதாரம் இன்னும் மோசமாகி கொண்டே போகிறது. பல உள்நாட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. அந்நாடு மிக பலவீனமாக உள்ளது. சீனாவில் உண்மையான அறிகுறிகளை எங்களால் உணரமுடிகிறது என்று ஜி. சாங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#China is in distress, with its economy still contracting and other problems unsolved and unsolvable. That's not to say China is not dangerous–it most certainly is–but it is to say that the country is dangerous because it is weak. https://t.co/A2cmJidJ6n
— Gordon G. Chang (@GordonGChang) June 27, 2020