Share it if you like it
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்து 1 மாதமே ஆன நிலையில் முதல்வர் சிவ்ராஜ் செளகான் பட்டையை கிளப்பி வருதாக அம்மாநில மக்கள் கூறி வருகின்றனர். தினம் ஒரு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருவது, மற்ற மாநில மக்களின் கவனத்தை அவரின் பக்கம் திரும்பியுள்ளது.
அண்மையில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி பி.எச்.டி வரை ஏழை குழந்தைகளின் கல்வி கட்டணத்தை முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் உயர் கல்விக்காக தனியார் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களின் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்தும் என்றும் கூறியிருந்தார்.
- புதிய தொழிற்சாலை தொடங்கும் நிறுவனங்களுக்கு 1 நாளில் லைசன்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்கவே, இந்த சலுகை என்று அரசியல் வல்லுனர்களின் கருத்து.
- விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புரோக்கர்களிடம் வழங்காமல் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டம்.
- தொழிற்சங்கங்கள் உற்பத்தி விவகாரங்களில் தலையிட இனிமேல் அனுமதியில்லை, என்று அரசு தெரிவித்து இருப்பது, கம்யூனிஸ்ட்களின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it