கருப்பர் கூட்டத்தின் முகத்திரையை..! அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…!

கருப்பர் கூட்டத்தின் முகத்திரையை..! அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…!

Share it if you like it

தி.க, திமுகவின், போலி பகுத்தறிவை வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் பலர் அதில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். அவரின் வாழ்வில் ஏற்பட்ட  சம்பவங்களில் இதுவும் ஒன்று.

கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு பகுத்தறிவாளர் ஒரு கடிதம் எழுதினார். “ஜயா, ‘சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்கிறார்களே, ‘சிவாயநம’ என்று சொல்லிக் கொண்டே ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தைத் தொட்டால் அபாயம் ஏற்படாதா?” என்று.

கண்ணதாசன் பதில்

“நல்லது, அபாயம் ஏற்படத்தான் செய்யும். கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும். அந்தப் பாடலைப் பாடிய அடியவர், ‘சிவாயநம என்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்று பாடவில்லை. சிந்தித்திருப்போர்க்கு என்று தான் பாடினார். அவர் சிந்தனையைச் சொன்னாரே தவிர செயலைச் சொல்லவில்லை. கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம் பகுத்தறிவு படுத்தும் பாடு. என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it