கர்தார்பூர் வழித்தடம் திறப்பு

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு

Share it if you like it

இந்திய பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவை வழிபடுவதற்கு ஏதுவாக கர்தார்பூர் வழித்தடம் இன்று திறக்கப்படுகின்றது. சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் அவர்களால் கட்டப்பட்ட குருத்வாரா பாகிஸ்தானில் உள்ளது. அதனை வழிப்பட முடியாமல் இந்திய பக்தர்கள் சிரமப்பட்டுவந்தனர். இந்த ஆண்டு குருநானக்கின் 550 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டாகும் . அதனால் கர்தார்பூர் வழித்தடம் குறித்து பக்தர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இன்று வழித்தடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்படுகிறது.  பாகிஸ்தான் செல்லும் இந்திய பக்தர்களுக்கு பாகிஸ்தான் அரசானது 20 டாலர் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. அதனை நீக்கவேண்டும் என இந்திய அரசு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்திய, பாகிஸ்தான் உறவு சரியாக இல்லாத நிலையில் இந்த வழித்தட திறப்பு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.


Share it if you like it