கர்நாடகாவில் இடைத்தேர்தல் தொடங்கியது

கர்நாடகாவில் இடைத்தேர்தல் தொடங்கியது

Share it if you like it

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் தொடங்கியது. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது இரு கட்சிகளையும் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டனர். சட்டப்பேரவை தலைவர் அவர்களை தகுநீக்கம் செய்தார். இதனால் ஆட்சி மாறி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்தது.

இந்நிலையில் அந்த தொகுதிகளில் இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. இது பா.ஜ.க அரசிற்கு முக்கிய தேர்தலாகும். இதில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் ஐந்தாண்டுகள் ஆட்சியை சுமூகமாக நடத்தலாம். அதனால் தேசிய அளவில் இந்த  தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Share it if you like it