கர்நாடகாவில் சங்கமிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

கர்நாடகாவில் சங்கமிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

Share it if you like it

  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது ஒரு வருடத்திற்கு ஒரு முறை அகில பாரத பொது குழு [அகில பாரத பிரதிநிதி சபா] கூட்டம் நடைபெறும். இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும். இந்த முறை வருடாந்திர சங்கமத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 பிரதிநிதிகள் மற்றும் தேசிய அளவில் பங்கேற்கும் பெண் பிரதிநிதிகள் அடங்கிய தொடர்புடைய அமைப்புகளும் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டம் மார்ச் 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெறும்
  • இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ் பணிகளை கொண்டு செல்வதற்கான வழிகள் பற்றி விவாதிக்கப்படும், மேலும் ஷாகா [தினசரி கூடுதல்] மேம்படுத்துதல், பயிற்சி முகாம்களை அதிகரித்தல், புதுமையான நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வது ஆகியவற்றை பற்றி விவாதிக்கப்படும்.
  • பல்வேறு அமைப்புகளின் மூலம் சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரிவுகளிலும் பணியாற்றும் ஸ்வயம் சேவகர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்த அனுபவங்களையும் உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் ஏபிபிஎஸ்ஸில் ராஷ்டிர சேவிகா சமிதியைச் சேர்ந்த மஹிலா பிரதிநிதிகளும் அழைக்கப்படுகிறார்கள்.
  • இந்த சந்திப்பு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன் ஜி பகவத் முன்னிலையில்,  ஸ்ரீ பையா ஜி ஜோஷி தலைமையில் நடைபெறும். சந்திப்பின் முடிவு மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட்டத்தின் போது ஊடகங்களுடன் பகிரப்படும். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த அகில பாரத ஊடக தொடர்பாளர் அருண்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share it if you like it