Share it if you like it
காணொலி காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பெற்றோர்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லை. மேலும் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பு மக்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு
எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. தற்பொழுது 7 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுப்பதன் சாதக, பாதகங்கள் குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக மாநில கல்வித்துறை உத்தவிட்டுள்ளது. இதனை வரவேற்று கர்நாடக அரசிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது
Share it if you like it