காங்கிரசின் தில்லுமுல்லும்  – என்டிடிவி பத்திரிகையாளரின் விசுவாசமும் !

காங்கிரசின் தில்லுமுல்லும் – என்டிடிவி பத்திரிகையாளரின் விசுவாசமும் !

Share it if you like it

  • சமீபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உபிக்கு அழைத்து செல்வதற்காக ஆயிரம் பேருந்துகளை தான் அனுப்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி உபி முதல்வர் யோகியிடம் வேண்டுகோள் விடுத்தார். யோகி அவர்களும் பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று அனுமதி அளித்தார். ஆனால் ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை. சுமார் 300 பேருந்துகளை மட்டுமே அவரால் ஏற்பாடு செய்ய முடிந்தது. ஆயிரம் பேருந்துகள் அனுப்புகிறேன் என்று உறுதி அளித்த பிறகு என்னசெய்வதென்று தெரியாமல், ஆட்டோ ரிக்ஷா மற்றும் லாரிகளை அனுப்பினார். உபி அரசு பேருந்துகளின் விவரங்களை வழங்குமாறு பிரியங்கா காந்தியிடம் கேட்டது. அதையொட்டி 200 பேருந்துகளின் விவரங்களை அனுப்பியது.
  • இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் ஆன்லைன் தரவுத்தளம் பிரியங்கா காந்தி அனுப்பிய ‘பேருந்துகளில் பல பேருந்துகள் உண்மையில் பிற உரிமையாளர்களின் பேருந்துகள் என்பதை வெளிப்படுத்தியது.
  • இந்நிலையில் என்டிடிவியின் பத்திரிகையாளர் உமாஷங்கர் சிங் என்பவர் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் பல பேருந்துகள் வரிசையாக அணிவகுத்து சென்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் இவை என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • உண்மை என்னவென்றால் அந்த பேருந்துகள் கும்பமேளாவுக்குச் செல்லும் மக்களுக்காக கடந்த பிப்ரவரி மாதம் யோகி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 500 பேருந்துகளின் அணிவகுப்பின் உருவமாகும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சாதனையை முறியடிக்க பிரயாகராஜில் 500 சிறப்பு பேருந்துகளை அணிவகுத்து ஏற்பாடு செய்து உ.பி. அரசு கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்க முயன்றது. இன்றுவரை, அதிகபட்சமாக அணிவகுப்பில் 390 பேருந்துகளை இயக்கிய சாதனையை அபுதாபி வைத்திருந்தது. உபி அரசு சுமார் 500 பேருந்துகளை அணிவகுத்து பிரயாகராஜில் நடைபெற்ற ஆர்த் கும்பமேளா 2019 மிகப் பெரிய பேருந்துகளின் அணிவகுப்புக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது.
  • உபி அரசின் புகைப்படத்தையே எடுத்து அதை காங்கிரஸ் தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்தது என்று பதிவிட்ட என்டிடிவி பத்திரிகையாளரையும் காங்கிரஸ் கட்சியையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் போட்டு தாக்கி வருகின்றனர்.

Share it if you like it