காங்கிரஸ் கட்சியை துணைக்கு அழைத்த சீனா…!

காங்கிரஸ் கட்சியை துணைக்கு அழைத்த சீனா…!

Share it if you like it

பாரத நாட்டின் நலனை கருத்தில் கொண்டு. குடியுரிமை திருத்தச் சட்டம், 370-வது சட்ட பிரிவு ரத்து. என மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திரு. ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் மிக கடுமையாக பொங்கி இருந்தார்.

இந்தியாவின் நடவடிக்கையால், ஜம்மூ-காஷ்மீர் மக்கள் எப்படி கஷ்டபடுகிறார்கள் பாருங்கள் என்று. ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவை ஆதாரமாக பாகிஸ்தான் ஜ.நா சபைக்கு தூக்கி கொண்டு ஓடியது. அதன்பின் ராகுல் காந்தி மழுப்பலான பதிலை இந்திய மக்களுக்கு தெரிவித்து அந்த விவகாரத்தை சமாளித்தார்.

தற்பொழுது சீனா, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை போல களத்தில் இறங்கியுள்ளது. பேமெண்ட் ஊடகங்கள், சில்லறை போராளிகள், இங்குள்ள தோழர்கள், உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், போலி பத்திரிக்கையாளர்கள், சீனா, பாகிஸ்தான், இவர்களை எல்லாம் மோடி அரசு ஒருபுறம் சமாளித்து வந்தாலும்.

ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவுகளும், காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களையும் சீனா தனது குளோபல் டைம் (உலக பொய்) பத்திரிக்கையில் மேற்கொள் காட்டி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்து வருவதையும் மோடி அரசு சமாளிக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் செயல்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it