முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப் படியான விட்டமின் சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்.
இது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.
முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.