கார்த்தி சிதம்பரம் ஆதரவு..! ஜோதிமணி கடும் எதிர்ப்பு..! உச்ச கட்ட குழப்பத்தில் காங்கிரஸ்..!

கார்த்தி சிதம்பரம் ஆதரவு..! ஜோதிமணி கடும் எதிர்ப்பு..! உச்ச கட்ட குழப்பத்தில் காங்கிரஸ்..!

Share it if you like it

தமிழகத்தில் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ளது நீட் தேர்வு. திரை பிரபலங்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், நீட் தேர்வு குறித்து தங்களின் நிலைப்பாட்டை  தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கார்த்தி சிதம்பரம். நீட் தேர்வுக்கு தனது முழு ஆதரவு என்று அண்மையில் அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் நீட் தேர்விற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்தால் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it