காஷ்மீர் மக்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான்!

காஷ்மீர் மக்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான்!

Share it if you like it

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

வழக்கம் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்வது, போலி டுவிட்டர் பக்கங்களை, உருவாக்கி இந்தியாவிற்கு எதிராக, செயல்பட வைப்பது என்று தொடர் அட்டூழியங்களை செய்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் போலி டுவிட்டர் பக்கங்கள், தமிழகத்தில் இருந்தும் சில தீய நோக்கம் கொண்டவர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் உணவு, மருத்துவம், பாதுகாப்பு இல்லாமல், கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும். கொரோனா தொற்றில் சிறப்பான மருத்துவ வசதிகளை, காஷ்மீரிகளுக்கு மோடி வழங்கப்படவில்லை என்று

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி, ஊடகங்கள், பத்திரிக்கைள் தவறான கருத்தினை உலக நாடுகளிடையே பரப்பி வருவதற்கு நெட்டிசன் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீருக்கு என்றே தனி ராணுவப்படை பிரிவு, வெகு விரைவில் விமானப்படை பிரிவு, தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ’ஆப்ரேஷன் மா’, அம்மாநிலத்தில் தொடர்ந்து அமைதி தவழ பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it