பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருதற்கு மோடியின் அயராத உழைப்பு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அதே போன்று உள்நாட்டின் வளர்ச்சி மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது மத்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தமது தீவிரவாதிகளை இந்திய அரசு 80% சதவீதத்திற்கும் மேல் ஒழித்து விட்டது என தீவிரவாதிகளின் தலைவன் அண்மையில் அலறிய காணொலி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. உலகிலேயே உள்நாட்டில் தயாரிக்கும் 6 வது நாடாக இந்தியா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமை பட கூடிய நிகழ்வாகும்.
பீகாரில் உள்ள மாதேபுராவில் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடும் கணொலியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make in India Powers Railway Manufacturing: 12,000 horsepower Locomotive Engine, built in Madhepura, Bihar departed from Pt. Deen Dayal Upadhyaya Station in UP
The powerful & fast electric loco will cut down emission & operating cost & revolutionise freight movement in India. pic.twitter.com/6sKhPM4nlt
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020