தமிழர்களின் தொன்மையும், மேன்மையும் பறைச்சாற்றும் விதமாக பாரத நாடு முதல் சீனா வரை உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் கல்வெட்டுக்கல் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழ் அடியில் 2015 ஆண்டு மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டதில் தமிழன் பெருமையை உலகறிய
செய்யும் பல்வேறு தொல்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து கீழடியில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. நான்கு மற்றும் ஜந்தாம் கட்ட அகழாய்வில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள் மற்றும் அணிகலன்கள் போன்ற அறிய பொருட்கள் கிடைத்தன.
இதன் அடிப்படையில் மேலும் சில இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆறாம் கட்ட ஆகழ்வாய்வுக்கான பணி பிப்ரவரி 19தேதி அன்று மேற்கொள்ளப்படுகிறது. இதனை முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் 32 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.