தமிழர்களின் தொன்மை, வீரம், வரலாறு, கலை, பண்பாடு, அனைத்திற்கும் மூத்த குடியாக தமிழ் கூறும் நல்லுலகம் திகழ்கிறது. தமிழ்மொழி கல்வெட்டுகள் சீனா முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகர்களின் கலாச்சாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசுடன் சேர்ந்து மத்திய அரசு பல்வேறு ஆய்வுகள் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
அண்மையில் பிப்ரவரி 22.2.2020 அன்று, சனிக்கிழமை உலக பல்கலைக் கழக சேவை மையத்தில். கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சிகளின் பகுப்பாய்வு மற்றும் ஒப்பீடு பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பி.எஸ்.ஹரி சங்கர், உறுப்பினர், IIAS, சிம்லா. கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.கீழடியின் தொன்மை, மற்றும் மேன்மை பற்றியும் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் சித்தாந்தத்தை எப்படி கீழடியில் திணிக்கிறார்கள் என அதிர்ச்சிகரமான செய்தியினை தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கீழடியில் அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மற்றும் பதிவுகளை இந்திய கல்வி சமூகம் எப்படி ஏற்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். விடுதலை புலிகளின் நிதி நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஜெகத் கஸ்பர் என்று குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.