குழந்தையின் பசிக்கு பால் கேட்ட தாய் – 18 மாவட்டங்கள் கடந்து பாலை அனுப்பி வைத்த ரயில்வே !

குழந்தையின் பசிக்கு பால் கேட்ட தாய் – 18 மாவட்டங்கள் கடந்து பாலை அனுப்பி வைத்த ரயில்வே !

Share it if you like it

  • மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி எனும் பெண் என்பவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால் அந்த குழந்தை ஆட்டிசம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு தினமும் பசுவின் பால், ஆட்டுப்பால், எருமைப்பால் என எது கொடுத்தாலும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவான். எனவே அவனுக்கு தொடர்ந்து ஒட்டகப்பால் மட்டுமே வழங்கி வருகிறேன். தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதால் என்னிடம் ஒட்டகப்பால் போதுமான அளவு இருப்பு இல்லை. என் குழந்தைக்கு ராஜஸ்தான் சாத்ரி நகரிலிருந்து ஒட்டகப்பால், அல்லது பால்பவுடர் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டு அதை பிரதமர் மோடியை டேக் செய்தார்.
  • இந்த ட்வீட்டைப் பார்த்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா அந்த பெண்ணின் குழந்தைக்கு ஒட்டகப்பால் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
    பின்னர் இந்த சம்பவம் குறித்து பதில் அளித்து ஐபிஎஸ் அதிகாரி போத்ரா ட்வீட் செய்திருந்தார். அதில், “20 லிட்டர் ஒட்டகப்பால் நேற்று இரவு அந்த பெண்ணின் குழந்தைக்கு வழங்கப்பட்டது. சுமார் 18 மாவட்டங்களைக் கடந்து ரயில்வே ஒரு குழந்தைக்கு உதவியுள்ளது. அந்த குடும்பத்தினர் நன்றியுடன் பாலைப் பெற்றுக்கொண்டு வடமேற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவி்த்தார். ரயில்வே துறையின் உதவியை நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.

Share it if you like it