- நேற்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கேரளாவில் மொத்த கொரோனா இறப்புகள் 4 மட்டுமே என்று அமைச்சர் சைலஜா கூறினார். இறந்துபோன நான்கு பேர்களில் ஒருவர் கோவாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், தனது கோவிட் -19 சிகிச்சைக்காக “கோவா என்கிற யூனியன் பிரதேசத்திலிருந்து” கேரளாவுக்கு வந்துள்ளார். மத்திய அரசு அந்த எண்ணிக்கையை எங்கள் எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டது. ஆனால் அந்த நபர் சிகிச்சைக்காக கேரளாவுக்கு வந்தார். ஏற்கனவே கோவாவின் யூனியன் பிரதேசத்திலிருந்து தொற்றுநோயை சுமந்து கொண்டிருந்தார். இவ்வாறு ஷைலாஜா பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
- கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சர்வதேச செய்தி அமைப்புக்கு அளித்த பேட்டியில் கேரள சுகாதார அமைச்சர் பொய்யான கூற்றுகளைக் கூறியதைக் கண்டு பெரிதும் திகிலடைந்ததாகக் கூறினார்.
I am appalled by the factually incorrect statements of Kerala Health Minister Smt. K. K. Shailaja Ji during her interview with the BBC regarding the death in Kerala of a COVID positive patient from Goa. @shailajateacher #GoaFightsCOVID19#IndiaFightsCOVID19
1/5 pic.twitter.com/1jFzpK2KYj— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 19, 2020
- கேரளாவில் கொரோனா தொற்றுக்கு பலியான நபர் கோவாவைச் சேர்ந்தவர் அல்ல என்று கேரள ஐ.டி.எஸ்.பி குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸைக் கையாள்வதற்கு கோவா மாநிலத்தில் வசதிகள் இல்லாததால் அவர் கோவாவிலிருந்து பயணம் செய்யவில்லை என்றும் திரு.சாவந்த் தெளிவுபடுத்தினார்.
Goa has outstanding healthcare facilities with Goa Medical College being one of the oldest and finest medical colleges in Asia. For decades, we have been treating a large number of non Goan patients, especially from our neighbouring states for different ailments. 4/5
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 19, 2020
- தொற்றுநோயை சமாளிக்க கோவாவில் ஒரு பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனை இருப்பதாகவும், கொடிய தொற்று நோயால் கண்டறியப்பட்ட 7 நோயாளிகள் அனைவரும் அந்த மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றபின் மீண்டு வந்ததாகவும், மேலும் கோவாவிலிருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனை தொடர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
I wish to clarify 3 things in this matter.
1. The said patient to our knowledge and as confirmed by Kerala IDSP team is not from Goa and has not travelled from here for lack of health facilities. 2/5
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 19, 2020
- கோவாவில் மிகச்சிறந்த சுகாதார வசதிகள் உள்ளன. கோவா மருத்துவக் கல்லூரி ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, நோயாளிகளுக்கு, குறிப்பாக நமது அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்.
- மேலும் கோவா ஒரு முழுமையான மாநிலம் ஆகும். ஒரு யூனியன் பிரதேசம் அல்ல என்பதையும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.
3. I also want to inform you Madam that Goa is a full-fledged State and not a Union Territory. 5/5
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) May 19, 2020
- ஒரு சுகாதார அமைச்சருக்கே மாநிலம் எது, யூனியன் பிரதேசம் எது என்று தெரியவில்லை. இதில் கேரளாவில் மட்டும்தான் கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ளதென்று தம்மட்டம் அடிக்கிறது பினராயி விஜயனின் கம்யூனிச அரசு என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.